2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.நா இணைப்பாளருக்கு கடிதம் அனுப்பிவைப்பு;அமைச்சர் ரோஹித்த போகல்லாகம

Super User   / 2010 ஜனவரி 05 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் இணைப்பாளர் பிலிப் அல்ஸ்டனிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

பிலிப் அல்ஸ்டனின் கடிதத்தை கவனத்தில்க்கொண்டு  விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்திருக்கிறதென்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு  ரோஹித்த போகல்லாகம கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் மூவர் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

இதனையடுத்து,  ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .