2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரபாகரனின் தந்தை சுகவீனமான நிலையில் காலமானார்

Super User   / 2010 ஜனவரி 07 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை  நேற்றிரவு காலமானார்.

பிரபாகரனின் தந்தை சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர் உயிரிழக்கும்போது வயது  86  எனவும் இராணுவப் பேச்சாளர்  குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னிப் பிரதேசத்திலிருந்து வெளியேறிய பிரபாகரனின் பெற்றோர் இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது. 













You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .