2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிறைக் கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம்

Super User   / 2010 ஜனவரி 08 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

196 கைதிகளுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென சிறைச்சாலை ஆணையாளர் மேயர் ஜெனரல் வி.ஆர்.சில்வா டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார். அத்துடன், 364 கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவிருப்பதாகவும் சிறைச்சாலை  ஆணையாளர் குறிப்பிட்டார்.

இந்தக் கைதிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சிறைச்சாலை ஆணையாளர் மேயர் ஜெனரல் வி.ஆர்.சில்வா ,  சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழும்,  பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழும்  இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.  





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .