2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் வழங்க ஜனாதிபதி இணக்கம்

Super User   / 2010 ஜனவரி 13 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களுக்கான அதிகாரப்  பரவாக்கல் தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதென்றபோதிலும், இனப் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கருதப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தமிழ் மக்களின் பிரச்சினக்கு அரசியல் ரீதியான தீர்வே அவசியமென்றும் அவர் கூறினார்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார்  இந்தியா செல்ல விரும்பினால், அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .