2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் இந்தியாவில் கல்வி; அரசு இணக்கம்

Super User   / 2010 ஜனவரி 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வியை தொடருவதற்கு இலங்கை அரசாங்கம் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா சம்பந்தமாக இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இலவசக் கல்வி குறித்துப் பேசுகையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஜி.திருவாசகம் இதனைக் கூறினார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்தியாவுக்கான இலங்கைப் பிரதி  உயர் ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உட்பட பல உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும்ஜி.திருவாசகம் தெரிவித்தார்.

இந்த இலவச கல்வித் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த சென்னைப் பல்கலைக்கழக தூதுக்குழு விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .