2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொதுத்தேர்தலின் பின் புதிய அரசியலமைப்பு அறிமுகம்-டளஸ் அழகப்பெரும

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலின் பின்னர், புதிய அரசியலமைப்பை சீர்திருத்தங்களுடன் அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்திருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும  தெரிவித்தார்.

கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையில், அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் புதிதாக அமைக்கப்படும் அமைச்சரவையில்  உறுப்பினர்களின் எண்ணிக்கை 40க்குள் அடங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என்பதில்  சந்தேகத்திற்கிடமில்லை எனவும்  அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

புதிய நாடாளுமன்றத்தில் 50 புதுமுகங்கள் வரவிருப்பதாகவும், இதன் அடிப்படையில் சிறிய அமைச்சரவையை அமைக்க ஜனாதிபதி கருதுவதாகவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • Pottuvilan Monday, 22 February 2010 11:29 PM

    will wait & see

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .