2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலக்கத்தில் இலங்கை காதலர்கள்

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 300இற்கும் மேற்பட்ட இளம் காதலர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இக்கைது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கருத்துத் தெரிவிக்கையில்... பொது இடங்களில் காதலர்கள் முத்தம் கொடுப்பதும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதும் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டார்.

பொலிஸாரினுடைய இந்த அதிரடி நடவடிக்கையினால் காதலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரமாக வெளியில் தமக்கு விருப்பமானவர்களுடன் செல்லமுடியவில்லை என சில காதலர்கள் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய உரிமை மீறப்படுவதாகவும் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். இவர்கள் வீட்டிற்குத் தெரியாமல் பிரத்தியேக வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு காதலர்களுடன் ஒழுங்கீனமாக நடந்துகொள்கிறார்கள். பொதுஇடங்களில் இவர்கள் இப்படி ஒழுங்கீனமாக நடந்துகொள்வதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகிறார்கள். அதனால்தால் அப்படி ஒழுங்கீனமாக நடந்துகொண்டவர்களை கைது செய்திருக்கிறோம். இவர்கள்மீது சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது. சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரை வரவழைத்து கண்டித்து அனுப்பியிருக்கிறோம். ஒழுங்கீனமாக நடந்த காதலர்களையும் கண்டித்து அனுப்பியிருக்கிறோம். தொடர்ந்தும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாமலிருக்க சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார் பொலிஸ் பேச்சாளர்.

நாங்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை நட்சத்திர ஹோட்டல்களில் உல்லாசமாக இருப்பதற்கு. கிடைக்கின்ற சொற்ப நேரத்தில் பார்க். பீச் என்றுதான் எங்களால் செல்லமுடியும். அந்த சுதந்திரம் பறிக்கப்படுவது மிகவும் வேதனை தருகிறது. எங்களுடைய அன்புக்குரியவர்களுடன் சில மணித்துளிகள் களிப்பதற்குக் கூட எமக்கு அருகதை இல்லையா என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • alga Saturday, 10 July 2010 07:12 PM

    ஐயோ ஐயோ !

    Reply : 0       0

    xlntgson Saturday, 10 July 2010 09:50 PM

    இச்செய்தியோடு ஒருநாளைக்கு ஆயிரம்கருச்சிதைவு செய்தியையும் வைத்து பார்த்தால் புதியகலாச்சாரங்கள் நமக்கு ஒத்து வருமா என்று அறிந்து கொள்ள இயலும். ஒரு தொழிலைத்தேடிக்கொள்ளாமல் வாழ்க்கை பயணத்தில் இணைய இயலாதென்பதை அறிந்து, பெற்றோர் அறியாவண்ணம் சந்திப்பதில் இருக்கும் கிளுகிளுப்பை இரசிக்காமல், கடமையே கண்ணாக இருந்து படித்து ஒரு தொழிலை தேடிக்கொண்டு தாமதிக்காமல் திருமணத்தை செய்யவேண்டும். தொழில்தேடி கிடைக்காதவர்கள் ஒருவரது வருமானத்தில் குடும்பத்தை சிக்கனமாக கொண்டுபோனாலும் சரி!

    Reply : 0       0

    koneswaransaro Sunday, 11 July 2010 01:39 AM

    போலீசார் சரியான முடிவை எடுத்து அதனை அமுல் படுத்தியிருக்கிறார்கள். இது தொடரவேண்டும். இதில் உரிமை பறிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    Reply : 0       0

    nafeeth Sunday, 11 July 2010 08:40 PM

    இதுவல்ல சரியான முடிவு இல்லை

    Reply : 0       0

    sabry Monday, 12 July 2010 07:57 AM

    போலிசுக்கு ஒரு சலுட் நல்ல முடிவு தொடர வாழ்துகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X