2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யார் தடுத்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடேன்... -அமைச்சர் விமல்

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யார் வற்புறுத்தினாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தினை கைவிடப்போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ இன்று அறிவித்திருக்கிறார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தி, இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னால் நேற்று முன்தினம் தனது உண்ணாவிரதத்தினை அவர் ஆரம்பித்திருந்தார். 3ஆவது நாளாகவும் தனது உண்ணாவிரதத்தினை அவர் தொடர்கின்றார்.

ஊடகவியலாளர்களிடம் இன்று அவர் கருத்துத் தெரிவிக்கையில்... ஜனாதிபதி என்னை வற்புறுத்தினாலும் நான் என்னுடைய விரதத்தினை முடிக்கப்போவதில்லை. என் சாவினைத் தடுப்பதற்கு பான்கி மூனினால் மட்டும்தான் முடியும். உண்ணாவிரதத்தினைத் தொடர்ந்து நான் இறந்தால் அதற்கு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலக ஊழியர்களும் பான்கி மூனும்தான் பதில்கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .