2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுனாமி நிதியை தொண்டு நிறுவனங்கள் வீணாக்கின: ஆய்வாளர்கள் தெரிவிப்பு

Super User   / 2010 ஜூலை 11 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி தாக்கத்தையடுத்து இலங்கை மக்களுக்கான நிவாரணங்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் பெரும் பகுதியை உதவி நிறுவனங்கள் வீணாக்கியதாக பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

 அவுஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.ரி., மொனாஷ் பல்கலைக்கழங்கள், கொழும்புப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்; ஆகியற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அவுஸ்திரேலிய உதவி முகவரகத்தின் ஏற்பாட்டில் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் 385 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சுனாமியின்பின் இலங்கையில் மாத்திரம் 500 உதவி நிறுவனங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதாகவும் ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு பாரிய அழிவுகளின்போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் இருக்கவில்லை என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தற்காலிக வீடுகளை நிர்மாணிப்பதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் சில குடும்பங்கள் நான்கு வருடங்கள்கூட கூடாரங்களில் இருந்தன" என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சுனாமியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவரிட்டால், அவர்கள் இதே தவறை தொடர்ந்து செய்து பெரும் தொகையான பணத்தை வீணாக்குவர்" என ஆர்.எம்.ஐ.ரி.ஐயச் சேர்ந்த மார்ட்டின் முல்லிகன் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .