2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் கதவைத் திறக்கிறார் நித்தியானந்தா

A.P.Mathan   / 2010 ஜூலை 12 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 80 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் பிடுதியிலுள்ள தனது ஆசிரமத்தில் ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் பிரசங்கம் நிகழ்த்தியிருக்கிறார் சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா.

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியதைத் தொடர்ந்து இருவரும் தலைமறைவாகியிருந்தனர். அண்மையில் நித்தியானந்தா மட்டும் இமயமலை அடிவாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதில் நித்தியானந்தா பிரசங்கம் செய்யக்கூடாது என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த நிபந்தனையை தளர்த்தியதைத் தொடர்ந்தே நேற்றைய தினம் மீண்டும் ‘கதவைத் திறவுங்கள் காற்று வரட்டும்’ என பிரசங்கத்தினைத் தொடர்ந்திருக்கிறார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவுக்கு நெருக்கமான பலபக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார்கள். நடிகை மாளவிகா இந்த பிரசங்கத்தில் கலந்துகொண்டு நித்தியானந்தாவிடம் ஆசிர்வாதமும் பெற்றிருக்கிறார். (மற்றுமொரு வீடியோ தயாராகிறதோ தெரியவில்லை...)


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 12 July 2010 09:05 PM

    சாமியார்களை சாடுவது போல் அவர்களது அந்தரங்கங்களை வெளியிட்டு பணம் தேடும் கேவலம் கண்டிக்கப்படவேண்டும். சன்யாசிகள் குடும்ப பாரம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதை தவிர அவர்கள் பச்சிலை மூலிகை சாப்பிட்டு ஆண்மையை அழித்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. பாதிரிமார் லீலைகளை மேற்கின் ஊடகங்கள் விற்பதுபோல் இந்திய ஊடகங்கள் இவர்களது சேஷ்டைகளை விற்கிறார்கள்.

    Reply : 0       0

    s k gunarasa Tuesday, 13 July 2010 01:01 AM

    ஒரு பொறுப்பு மிக்க செய்தி நிறுவனம் என்ற வகையில் மற்றுமொரு ........... என்ற கதை சொல்வது அவ்வளவு நல்லதன்று !

    Reply : 0       0

    Jasmine Wednesday, 14 July 2010 02:11 AM

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை நித்தியைபோல எமாற்றுவித்தைகாரர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
    இந்து தர்மத்தை விற்று பிழைப்பு நடத்தும் இத்தகைய போலி சாமியர்களினால்தான் இன்று தர்மம் தலைகுனித்து நிற்கிறது.
    தம்மைத்தாமே தெய்வம் என்று சொல்லி ஏமாற்றி அப்பாவி பொதுமக்களின் பணத்தையும் ஒழுக்கத்தையும் சூறையாடும் சாமிகள் இந்தியாவில் இருக்கும்வரை இந்து மதத்திற்கு விமோசனம் கிடையாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .