2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹரீஸ் எம்.பி.யின் கருத்துக்கு டெலோ அமைப்பு கண்டனம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு இணைப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கருத்தானது, வேதனைக்குள்ளாகியுள்ள சமூகத்தை அழிக்கும் செயலுக்கு ஒப்பானது என்று "டெலோ" அமைப்பின் செயலாளர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், வட - கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களின் வாழ்விடமே தவிர இன ரீதியான இடமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகம் மிக நெருக்கமாக பழகி வருவதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் சில நல்லெண்ண அடிப்படையிலான கருத்துக்களை பரிமாறி வருகின்றது.

இந்நிலையில், மேற்கண்டவாறான கருத்துக்கள் எம்மை அழிக்க முற்படும் தீய சக்திகளுக்கு தூபமிடும் செயலாக அமைகிறது என்றும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X