2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நம்பமுனுவ கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Super User   / 2010 ஜூலை 14 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(டி. பாருக் தாஜுதீன்)

நம்பமுனுவ கொலை வழக்கு விசாரணையில் பங்குபற்றும் ஜுரிகள் சபையின் தலைவருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்  மற்றும் நீதிமன்றத்திற்கு வந்த சந்தேகத்திற்கிடமான நபர் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் பூர்த்தி செய்யாத நிலையில், இவ்வழக்கு விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

ஜுரிகளின் தலைவருக்கு எச்சரிக்கை  விடுத்ததாகக் கூறப்படும் நபரை இன்னும் இனங்காண முடியாதிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான நபர், வழக்கின் நான்காவது எதிரியான தற்போது தலைமறைவாகியுள்ள நிஹால் சுரேஷுடன்  தொடர்புடையவரெனக்  கூறப்படுவதாக தெரிவித்த அரச சட்டத்தரணி திலீபா பீரிஸ், அந்நபருக்கு பிணை வழங்குவதை ஆட்சேபித்தார்.

1996 ஆம் ஆண்டு நம்பமுனுவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கான தேர்தல் நியமனப் பத்திரங்கள் தாக்கப்பட்டமைக்கு அடுத்தநாள் கே. டொன் சந்ராரட்ண கத்திரிஆரச்சி என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இவ்வழக்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கை ஜூலை 26 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .