2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரச சேவையில் இரண்டாம் மொழி கட்டாயம்; அரசாங்கம் தீர்மானம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 15 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சேவையில் கடமையாற்றுபவர்களுக்கு  இரண்டாம் மொழியைக் கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி முதல் அரச சேவையில் இணைந்தவர்கள் இரண்டாவது மொழியினைத் தெரிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அரச ஊழியர்களுக்கான இரண்டாம் மொழியினைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச கரும மொழித் திணைக்களம் தெரிவித்தது.

இதன் முதல் கட்டமாகத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான கருத்தரங்கு எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையில்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் கூறியது.

இந்த கருத்தரங்கில், சகல மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 45 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X