2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்குளி தாக்குதல் விவகாரம்: மக்களின் புகார்களை பதிவுசெய்யுமாறு உத்தரவு

Super User   / 2010 ஜூலை 15 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டி. பாருக் தாஜுதீன்)

மட்டக்குளி பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட விவகாரத்தில் பொலிஸார் அப்பகுதியிலுள்ள மக்களையும் அவர்களின் உடமைகளையும் தாக்கியதாகவும் இது தொடர்பான புகார்களை பொலிஸார் பதிவுசெய்ய மறுத்ததாகவும் சந்தேக நபர்களின் சட்டத்தரணி நேற்று  நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதையடுத்து, இது தொடர்பான புகார்களை பதிவுசெய்யுமாறு   கொழும்பு மேலதிக நீதிவான் லால் ரணசிங்க பண்டார கொழும்பு குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இவ்விவகாரம் முழுமையாக ஒருபக்கச் சார்பாக இருப்பதாக சந்தேக நபர்களின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறினார்.

இவ்வழக்கில் முறைபாடு செய்தவர்கள் பொலிஸார். புலனாய்வுகளை மேற்கொண்டவர்களும் பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் கண்டவர்களும் பொலிஸார் என சட்டத்தரணி கூறினார்.

இதேவேளை, சந்தேக நபர்களில் சிலர் இன்று ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஏனையோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .