2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கையில் இயல்புநிலை திரும்ப இந்திய செல்வாக்கை பயன்படுத்துவோம் - கருணாநிதிக்கு மன்மோகன் சிங் கடிதம

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்திய செல்வாக்கை பயன்படுத்துவோம் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இலங்கையிலுள்ள சிறுபான்மையினத் தமிழ் மக்களின் நிலை குறித்து முதலமைச்சர் கருணாநிதியினால் பிரதமருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங்கினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  தனது பதில் கடிதம் மூலம் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதம, இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் தமிழ் மக்கள் குறித்து கேட்டறிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு  மேற்கொள்ளும் என்றும் அவர் கடிதத்தின் மூலம் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகளை  விரைந்து மேற்கொள்வதன் மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பான வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று கூறியுள்ள மன்மோகன் சிங், அத்ற்காக இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மறுவாழ்வுப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்குவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் எனவும்  இந்திய மத்திய அரசு ஏற்கனவே உறுதியளித்தது. மேலும், அம்மக்களுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளில் நிலையான பொருளாதார நடவடிக்கைகள் தொடர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே என்று பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசியல் தீர்வு தொடர்பான முயற்சியில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான நடைமுறைகளில் தங்களுடைய கருத்துகளையும், ஆலோசனைகளையும் பயன்படுத்திக்கொள்வேன் என்று பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Saturday, 17 July 2010 08:55 PM

    மன்மோகன் சிங் ஐ நா விசாரணை குழு குறித்து ஒன்றும் கூறாமை வியப்பை தருகிறது! பான் கி மூன் இந்திய தலைவர்களுடன் இதைப்பற்றி பேசாமலா இருந்திருப்பார்? அணி சேரா நாடுகளில் பிரதானமான நாடு என்ற முறையில் நடுநிலை வகிக்க முடிவு எடுத்து விட்டனரோ? இரு இனங்களும் இந்தியாவை நம்பி இருப்பதால் அவர்களது நிலைமையும் தர்ம சங்கடம் தான்.இறுதியில் சமாதானத்துக்கான ஓர் அடித்தளம் இடப்படும் அறிகுறியும் தெரிகிறது. அதற்காக தான் இந்த நிபுணர் குழு நாடகம் என்று நான் நினைக்கின்றேன். இலங்கை அரசும் நாங்கள் வென்று விட்டோம் என்று எண்ணாமல் இருக்கணும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .