2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெரிய பண்டிவிரிச்சானில் மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு, 110 குடும்பங்களைச் சேர்ந்த 257பேர் மீள்குடியேற்றப்பட்டனர்.

ஆறு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த இக்குடும்பங்களுக்கு தலா 5ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. இந்நிலையில், நானாட்டான், வங்காலை, முகலி ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த மேலும் 381பேர் பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அத்துடன், மன்னார் தீவுப் பகுதியிலிருந்தும் 41 குடும்பங்களைச் சேர்ந்த 100பேர் பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இம்மக்களுக்கான உணவு வசதிகள் உரிய அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

எனினும், மீள்குடியேற்றத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கு ஒரு நாளைக்கான உணவு மாத்திரமே வழங்கப்படுவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், தங்களுடைய இருப்பிடங்களை துப்புரவு செய்வதற்கான எந்தவித உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தங்களுடைய வீடுகளை துப்புரவு செய்ய முடியாதிருப்பதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றத்துக்காக அழைத்துவரப்பட்ட மக்களில் அதிக எண்ணிக்கையானோர் பெரிய பண்டிவிரிச்சான் பாடசாலையிலேயே தங்கியுள்ளனர். இதுவரை 231 குடும்பங்களைச் சேர்ந்த 738பேர் மீள் குடியேற்றத்துக்காக அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X