2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறிய மக்கள் உதவிகளின்றி அவதி

Super User   / 2010 ஜூலை 17 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிய பண்டிவிருச்சான் பகுதியில் மீள் குடியேற்றம் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட மக்களை தங்களின் வீடுகளை துப்பரவு செய்வதற்கும் திருத்தி அமைப்பதற்கும் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதுவரை மீள் குடியேற்றத்திற்காக 234 குடும்பங்களைச் சேர்ந்த 738 பேர் மீள் குடியேற்றத்திற்காக பெரிய பண்டிவிருச்சான் மகாவித்தியாலயத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் கொண்டுவந்துள்ள உபகரணங்களைக் கொண்டே வீடுகளை திருத்தி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் பல குடும்பங்கள் எதுவித உதவியும் இல்லாமல் பாடசாலையிலேயே தங்கியுள்ளன. எனவே தங்களுடைய வீடுகளை சீர்செய்து குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர் அதிகாரிகளிடம் பாடசாலையில் தங்கியுள்ள மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதேவேளை எதிர்வரும் 19ஆம் திகதி இப்பாடசாலை மீண்டும் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .