2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாலையூற்றில் டெங்கு ஒழிப்பில் ஈடுபட்ட சுகாதார அதிகாரி தாக்கப்பட்டார்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை  சுகாதார வைத்திய அதிகாரிக்கு பாலையூற்றில்  வைத்து பொதுமகன் ஒருவர் கத்தியால் குத்த முனைந்துள்ளதாக திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பாலையூற்று பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கத்திற்கு எதிராக புகை விசுறும் நடவடிக்கைகளில் சுகாதார வைத்திய அதிகாரி சகிதம், பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர். அவ்வேளையில் அங்கு வந்த நபரொருவர் புகை விசுறுபவர் மீது தாக்குதல் நடத்தியதோடு உபகரணத்தையும் சேதப்படுத்தினார்.  இதனை கேட்கச் சென்ற சுகாதார வைத்திய அதிகாரி மீது, அந்நபர் கத்தியால் குத்த முனைந்துள்ளர். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி ஓடி தப்பித்துக் கொண்டார். இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான சுகாதாரதுறை ஊழியர் அலோசியஸ் திருக்கோணமல பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரினை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X