2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பிச்சைக்காரர்கள் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

Super User   / 2010 ஜூலை 05 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட பொலிஸ் குழுவொன்று கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள பிச்சைக்காரர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பிச்சைக்காரர்களை தொடர்ச்சியாக ஒருவர் தாக்கி கொலை செய்துவந்தமை அம்பலமாகி சில வாரங்களில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் சுற்றிவளைக்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு கொண் செல்லப்பட்டனர்.
இதேவேளை பிட்டகோட்டே பகுதியில் நேற்றுமாலை பிச்சைக்காரர்களை பொலிஸார் ட்ரக் வாகனங்களில் ஏற்றியதை தாம்  கண்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் பிச்சையெடுப்பது சட்டவிரோதமானது எனவும் கைது சுற்றிவளைக்கப்பட்ட பிச்சைக்காரர்கள் அம்பாந்தோட்டை ரிதியகமவிலுள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதிகளில் பிச்சைக்காரர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளில் நிறுவனமயப்படுத்தப்பட்ட சில குழுக்கள் ஈடுபடுவதாகவும் இச்சட்டவிரோத செயற்பாட்டை முறியழபப்தற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுஇடங்களில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர் ஒருவர் தினமும் சுமார் 3000 ரூபாவரை பெறுவதாக கூறப்படுகிறது. 
கடந்தவாரம் கல்கிஸை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அங்கவீனமான ஒருவரின் உடலை பொலி!hர் கண்டெடுத்தனர். கடந்த மாதம் நகரின் பல்வேறு இடங்களில் 5 பிச்சைக்காரர்களின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.
(இந்திக சிறி அரவிந்த)


You May Also Like

  Comments - 0

  • alga Tuesday, 06 July 2010 12:48 PM

    இந்த நாட்டில பிச்ச காரன்கள் கூட நிம்மதியா இருக்க முடியாதா?

    Reply : 0       0

    agoyajimmy Tuesday, 06 July 2010 06:38 PM

    இது ரொம்ப நல்ல வேலை. இப்படிதான் இருக்க வென்றும் போலீஸ் நல்ல வேலை செய்றாங்க பாராட்ட தக்கது .இலங்கை இனி நல்லா வரும். ரொம்ப சந்தோசமா இருக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .