2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.நா. அலுவலகம் முற்றுகை; நாட்டின் நற்பெயருக்கு களங்கம் - ரணில்

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டதானது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேசத்தின் முன்னால் இலங்கை தலைகுணிய வேண்டி ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பாக, ஐ.நா.செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு விவகாரமானது வேறு வகையில் எதிர்நோக்கப்படவேண்டிய பிரச்சினையாகும் என்றும் ரணில் விக்கிரமசிங்க சபையில் கூறினார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பு ஐ.நா. அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .