2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மன்னாரில் டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டில்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் தீவிரமடைந்து வந்த டெங்குக் காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரச சுகாதரசேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கடந்த மாதம் 25ஆம் திகதி தொடக்கம் இம் மாதம் 01ஆம் திகதி வரை சிறுவன் பாடசாலை மணவி உட்பட 05பேர் உயிரிழந்தனர். இவர்களுள் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் உயர்மட்டத்தில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மன்னாரில் தற்போது டெங்குக் காய்ச்சல் பரவல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதோடு டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் இதனால், அதிகலவான தொண்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .