2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வட்டார முறை அறிமுகம் செய்யப்படும்:எஸ்.பி.திஸாநாயக்க

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அடுத்து இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களின்போது வட்டார முறையொன்று அறிமுகம் செய்யப்படும். அது இரண்டு கிராம அதிகாரிகள் பிரிவிற்கு ஒரு அங்கத்தவர் வீதம் தெரிவு செய்யும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று பாத்ததும்பறையில்  இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

எதிர்காலத்தில் கிராம அதிகாரி பிரிவு ரீதியில் 5க்கு 0 சதவீதமான அங்கத்தவர்கள் நேரடித் தேர்தல் மூலமும் 50 சதவீதமான அங்கத்தவர்கள் விகிதாசார தேர்தல் முறையிலும் தெரிவாகும் புதிய அமைப்பிலான  தேர்தல் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அடுத்து இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களின்போது வட்டார முறையொன்று அறிமுகம் செய்யப்படும். இரண்டு கிராம அதிகாரிகள் பிரிவிற்கு ஒரு அங்கத்தவர் வீதம் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். அதேநேரம், அங்கத்தர் பெயர்ப்பட்டியலொன்றும் வழங்கப்படும். அப்பட்டியலுக்கு தற்போதைய விகிதாசார முறையைக் கொண்டதாக இரு கிராம அதிகாரி பிரிவிற்கு ஒருவர் என்ற ரீதியில் தெரிவு இருக்கும்.

அதாவது கூட்டுமொத்தமாக ஒரு கிராம அதிகாரி பிரிவிற்கு ஒருவர் தெரிவாகின்றபோதும் 5;0 சதவீதமான அங்கத்தவர்கள் நேரடித்தேர்தல் மூலமும் 50 சதவீதமான அங்கத்தவர்கள் விகிதாசார முறையிலும் தெரிவாகுவர் என்று அவர் கூறினார்.

இம்முறை அமுலாகினால் தத்தமது வட்டாரத்தை மட்டும் ஒரு போட்டியாளரால் பார்த்துக்கொள்ளமுடியும். முழுத்தொகுதிக்குமாக அல்லது மாவட்டத்திற்குமாக அலையத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .