2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக லக்ஸ்மன் செனவிரத்ன எம்.பி சாட்சியம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென நிறுவப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று காலை கடற்படைத் தலைமையகத்திலுள்ள இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
 

இதன்போது, ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான மூன்றாவது சாட்சியாளராக லக்ஸ்மன் செனவிரத்ன எம்.பி மன்றுக்கு சமூகமளித்ததுடன் அவருக்கு எதிராக சாட்சியமளித்ததாக இராணுவ ஊடக பிரிவு அதிகாரியான கேனல் துமிந்த கமகே தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் எச்.எல்.வீரதுங்கவின் தலைமையிலான நீதிபதிகள் முன்னால் வழக்கு தொடுனர் மூன்றாவது சாட்சியாளரை அழைத்து விசாரித்த நிலையில் குறித்த விசாரணைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி, சமூகமளிக்காத நிலையிலும் ஆகஸ்ட் 12ஆம் திகதி காலை 9 மணிக்கு இராணுவ நீதிமன்றம் விசாரணையைத் தொடரும் என உத்திரவிடப்பட்டதாக கேனல் கமகே கூறினார்.

இதன்படி நாளை 11ஆம் திகதி முன்னர் கூறியபடி இராணுவ நீதிமன்றம் கூடமாட்டாது என்றும் நாளை மறுதினம் விசாரணைகள் தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சேவையில் ஈடுபட்டிருந்த போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்காக முதலாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டது. இதன் ஏனைய நீதிபதிகளாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர்.விஜேதுங்க மற்றும் மேஜர் ஜெனரல் டீ.ஆர்.பீ.ஜயதிலக்க ஆகியோர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (M.M)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .