2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மட்டு. மாநகர சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஊழியர்கள் ஏற்க மறுப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.குமார்)

மட்டக்களப்பு மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் தாக்கப்பட்டமைக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாநகர சபை ஊழியர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

அலுவலக தொழில்நுட்ப உத்தியோகஸ்தரை தாக்கிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதுடன் அவர்களின் மாநகர சபை உறுப்பினர் பதவிகளையும் நீக்குமாறு உழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊழியர்களின் கோரிக்கையை பரீசிலிப்பதற்காக மாநகர முதல்வரின் இல்லத்தில் மாநகர சபை உறுப்பினர்கள் சிவகீத்தா பிரபாகரன் தலைமையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

மாநகர ஆணையாளர் எஸ்.சிவராஜா சகிதம் கோரிக்கைகள் ஆராயப்பட்டு எழுத்து மூலம் பதில் சமர்ப்பித்தனர்.

குறிப்பிட்ட உறுப்பினர்களை பொலிஸ் கைது செய்து பிணையில் விடுதலை செய்துள்ளமையினால் வழக்கு தொடரப்படும் . இதனால் அவர்களை மீண்டும் கைது செய்ய முடியாது என சபை அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

மாநகர சபை முகாமைத்துவ குழுவிலிருந்து அவர்களை நீக்குவதாகவும், மாநகர சபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் இல்லாததனால் ஆளுநருக்கு இது தொடர்பில் அறிவிப்பதாகவும் அத்துடன் காலையில் இடம்பெற்ற சம்பவத்தின் ஆர்ப்பாட்டத்தின் போது ஊழியர்களால் மாநகர சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய ஊழியருக்கு எதிராக ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேன்டும் எனவும் மாநகர சபை உறுப்பினர்கள் தீர்மானித்து எழுத்து மூலம் சமர்ப்பித்தனர்.

இதனை ஏற்க மறுத்த ஊழியர்கள், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .