2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரத்தியேக வகுப்பு குறித்து புதிய சட்டம்

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜமீலா நஜிமுடீன்)

நாட்டில் இயங்குகின்ற தனியார் மேலதிக வகுப்புகள் சர்வதேச பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் தொடர்பாக இறுக்கமான புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

தரம் குறைந்த கல்வி நிலையங்கள் உருவாக்கப்படுவதை குறைப்பதற்காகவே இவ்விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடார்.

புதிய கல்விச் விதிமுறைகளை உள்ளடக்கிய சட்டமூலமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்காக  ஏற்கனவே அரசால் விசேட ஆணக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் உத்தேச சட்டம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தொலைதூர கிராமங்களில் பிரத்தியேக தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் சிலர் மூலம்  சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர்களினால் சிறார்கள் துஷ்பிரயகம் மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுவதாக 1929 எனும் அவசர தொலைபேசிக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது குறித்த விதிமுறைகள் தொடர்பாக பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மோசடியாளர்கள் சிலர் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் எனக் கூறிக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .