2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

திருமலை-மூதூர் கடல்வழி போக்குவரத்து ஸ்தம்பிதம்

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை-மூதூர் கடல்வழி போக்குவரத்து சேவை ஸ்தம்பிதமடைந்துள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையினால் சேவையில் விடப்படும் சேருவில II என்ற பயணிகள் கப்பல், மற்றும் தனியாரின் இயந்திர படகுகள், பழுதடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் இச் சேவை இடம்பெறவில்லை. மூதூரில் இருந்து திருக்கோணமலை வரும் பயணிகளும், திருக்கோணமலையில் இருந்து மூதூருக்கு செல்வோரும் இதனால் பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

தரைவழியாக மிகவும் நீண்ட தூரம் பயணம் செய்தே குறித்த இலக்கினை அடைய வேண்டி உள்ளது. இதனால் நேரம் விரயமாக்கப்படுவதோடு அதிக பணச்செலவும் ஏற்படுகிறது.

இது விடயமாக இலங்கை துறைமுக அதிகார சபையினருடன் தொடர்பு கொண்ட போது இயந்திர கோளாறு காரணமாக இந் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று தினங்களில் இது சீர் செய்யப்பட்டு சேவை தொடரப்படும் என தெரிவித்தனர்.

 

 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .