2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத குடியேற்றம் குறித்து இலங்கை - கனடா பேச்சு

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்கள், ஆட்கடத்தல்கள் தொடர்பாக பரஸ்பர கரிசனைகள் குறித்து கனேடிய குரவரவு, பிரஜாவுரிமை,  பல்லின கலாசாரத்துவ அமைச்சர் ஜேசன் கென்னியுடன் கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடாவின் வெளிவிவகாரத் திணைக்களம், கனேடிய  எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவரகம், ரோயல் கனேடிய பொலிஸ் மற்றும் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனும் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சக்திகளால் தமது சார்பு அமைப்புகளுக்கூடாக மேற்கொள்ளப்படும் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்தும் கனேடிய அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம், போதைக்கடத்தல், ஆட்கடத்தல் உட்பட நாடுகடந்த குற்றச்செயல்கள் மூலம் சர்வதேச  மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கனேடிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .