2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

திண்மக்கழிவு அகற்றும் திட்டத்திற்கு கல்முனை மாநகரசபை ஏகமனதாக அங்கிகாரம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
 
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரிய நீலாவனை மருதமுனை போன்ற பகுதிகளில் கடந்த மூன்றரை வருடங்களாக இத்தாலியன் ஓவேஸீஸ் எனும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தினால் திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தினை மேற்கொண்டு வந்தது.

இந்நிறுவனத்தின் இத்திட்டம் கடந்த ஜூலை 30ஆம் திகதியுடன் முடிவுற்றதையடுத்து கல்முனை மாநகரசபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தினை மேற்கொள்வதற்கான அங்கிகாரத்தை கல்முனை மாநகரசபையிடம் செவனத்த எனும் அரசசார்பற்ற உள்ளூர் நிறுவனத்தினால் கேட்டிருந்தது.
 
இத்திட்டம் தொடர்பான பிரேரனையை கல்முனை மாநகரசபையின் சபைக் கூட்டத்தில் மாநகரசபை பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் முன்வைத்தார். இத்திட்டத்தை இந்நிறுவனம் மேற்கொண்டால் கல்முனை மாநகரசபைக்கு நூறு வீதம் நன்மை உள்ளதாகக் கருதி நீண்ட நேர வாத பிரதிவாதத்திற்குப் பின் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதனையடுத்து, சபையின் ஏகமனதான அங்கிகாரத்தை வழங்கியது.  

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவாக மாதத்திற்கு ஒரு தடவை ஒவ்வொரு குடும்பத்திடமும் 30 ரூபாவை அவ் அமைப்பு அறவிடும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .