2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பீரிஸ், கருணா, மிலிந்தவையும் விசாரிக்க வேண்டும்: ஐ.தேக.

Super User   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மற்றும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சமாதான முயற்சிகளில் இவர்கள் முக்கிய பாத்திரம் வகித்தவர்கள் என்பதால் சமாதான முயற்சிகள் குறித்த நடுநிலையான அவதானிப்பை பெற்றுக்கொள்வதற்கு இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

"இன்றைய நிலையில் ஐ.தே.கவை தாக்குவதற்கும் சமாதான முயற்சிகளை சிறுமைப்படுத்துவதற்குமே இந்த ஆணைக்குழு பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது.இதைவிட அக்காலத்தில் சமாதான முயற்சிகளில் தீவிரமாக செயற்பட்டவர்களான மேற்படி அங்கத்தவர்களை ஆணைக்குழு அழைத்து விசாரிக்க வேண்டும் என ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .