2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சன் ஸீ கப்பல் அகதிகளிடம் கணேடிய அதிகாரிகள் விசாரணை

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

"எம்.வி. சன் ஸீ" கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்றுள்ள சுமார் 490 இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் ஆட்கடத்தல்காரர்கள் அல்லது பயங்கரவாதிகள் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்கு விசாரணை நடத்தப்படும் என கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்திலுள்ள எஸ்கிமால்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக் டோவ்ஸ், அகதிகளை கனடா வெகுவாக வரவேற்பதாகவும் ஆனால் அகதிகள் முறைமையை கிரிமினல்களும் பயங்கரவாதிகளும் துஷ்பிரயோகம் செய்யாமலிருப்பதை உறுதிப்படுத்த கனேடிய அரசாங்கம் விரும்புகிறது எனவும் கூறினர்.

கிரிமினல்கள் ஆட்கடத்தல்களை மேற்கொள்வதை முறியடிப்பதற்கு மேலும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கம் ஆராயும். கனேடிய சட்டத்திற்கிணங்க கப்பலில் வந்த அனைவரும் அடையாளம் காணப்படுவதற்கான செயன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் நடவடிக்கை மேற்கொள்ளும்  எனவும் அவர் கூறினார்.


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் மற்றும் மனிதக் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழங்குத் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியேற்றவாசிகளின் கப்பலை கையாள்வதற்கு சிறந்த வழி அது கனேடிய நீர்பரப்பை அடையும்வரை காத்திருப்பதான் எனக் கூறிய அமைச்சர் டோவ்ஸ், ஆழ்கடலில் இத்தகைய கப்பல்களை எதிர்கொள்வதில் சில சட்ட ரீதியாக கடப்பாடுகள் உட்பட பல பிரச்சினைகள் உள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, கப்பலில் வந்த அனைவரும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்படும் என கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு சுமார் 72 மணித்தியாலங்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கடினமானது என்பதே இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பலில் வந்த அகதிகளுக்கு பாரிய மருத்துவ உதவிகள் தேவைப்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .