2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஏற்க பொன்சேகா மறுப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றபின் தனது இராணுவ பதவிநிலையை வாபஸ் பெறுவதென்ற தீர்ப்பும் நகைச்சுவையானது என பொன்சேகா விமர்சித்துள்ளார்.

"கீழ் மட்ட இராணுவ அதிகாரிகள் நால்வர் வழங்கிய இத்தீர்ப்பு எனக்கும் பொதுமக்களுக்கும் நகைச்சுவையானவை" என ஜெனரல் சரத் பொன்சேகா கூறியதாக திருமதி அனோமா பொன்சேகா டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  ஜனநாயக தேசிய முன்னணி முதலாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.  பொன்சேகாவின் சட்டத்தரணிகள் விடுமுறையில் இருக்கும்போது இவ்வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாவும் இது ஒரு பக்கச் சார்பான வழக்கு எனவும் அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .