2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பில் காட்டுகின்ற அக்கறையை விபத்துக்களை கட்டுப்படுத்துவதிலும் காட்ட வேண்டும்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆஸிக்)
வீதி விபத்துகளினால் கடந்த வருடம் 9,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24,000 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் 64,000 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவருத்து பணிப்பாளர் நாயகம் பீ.டீ.எல்.தர்மப்பிரிய குறிப்பிடுகின்றார்.

கண்டி கட்டுகஸ்தோட்டையிலுள்ள அரச ஊழியர்களை பயிற்றுவிக்கும் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கண்டி மாவட்ட சாரதிகள் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்... டெங்கு நோயால் 150 பேர் உயிரிழந்ததுடன் அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் காட்டும் அக்கறை 9,000 பேர் உயிரிழக்கின்ற வீதி விபத்துகளுக்கு காட்டாமலிருப்பது வருத்தத்துக்குரியதாகும் எனவும் தெரிவித்தார்.

மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கோட்டபாய ஜயரத்ன ஆகியோர் உட்பட பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .