2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இணைந்து ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக வழக்கு

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரீ.பாரூக் தாஜுதீன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்காக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன்கூட்டுச் சேர்ந்து செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியை கோருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மிக்கா சிங்கப்புலியிடம் தெரிவித்தனர்.

குற்ற புலனாய்வு பிரிவினரின் புலனாய்வு சுருக்க அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த விசாரணையை பொலிஸ் மா அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வு பிரிவினரினர் ஆரம்பித்தனர்.

சந்தேக நபர்களான சிவராஜா, சுபா கிருஷ்ணன், நடராஜசிங்கம் சபாஷ் அல்லது ஸ் ரீபன் அல்லது ஜானு, லின்ரன், சந்திரஷான், வரதராஜன் ஆகியோர் தடுத்துவைக்கப்பட்டு குற்றஞ்சாட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

நடராஜசிங்கம் சுபாஸ் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் மருமகன் எனவும் அவரின் பிரத்தியேக உதவியாளராகவும் பணியாற்றியதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை சந்தித்து அவருடன் சேர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய திட்டம் தீட்டினர் என குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது.

சந்தேக நபர்களுக்கு விடுதலைப் புலி உறுப்பினரான மலேஷியவைச் சேர்ந்த ராஜன் என்பவர் நிதி வழங்கினார். இவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஒரு மில்லியன் ரூபா அனுப்பியிருந்தார்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கிரகரி வீதியில் ஓர் இடத்தையும், கிருலப்பனையில் ஓர் இடத்தையும் ஜனாதிபதி அடிக்கடி வரும் இடங்களாக, சந்தேக நபர்களுக்கு காட்டியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய தாம் விசாரணைகளை முடித்துக் கொண்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததுடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஒரு தினத்தை கோரினார். நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விண்ணப்பத்தை அனுமதித்தார்.


You May Also Like

  Comments - 0

  • sooriyan Wednesday, 18 August 2010 05:24 PM

    குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும்.. சட்டத்தின் முன் யாவரும் சமம் . பொன்சேகாவுக்கு மட்டுமல்ல..

    Reply : 0       0

    xlntgson Thursday, 19 August 2010 08:37 PM

    காவல்துறை வேண்டுகோளின்படி இவ்வழக்கில் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டு விட்டார் என்று சகோதர மிரர் ஆங்கில சேவையில் கண்டேன்! ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கலாம்.

    Reply : 0       0

    D W K David Thursday, 19 August 2010 09:01 PM

    நேர்மையான விசாரனை தேவை.
    குற்றவாளியாராக யார் இருந்தாலும் தண்டிக்கபடுவது வரவேற்கப்படும்.

    வசந்தகுமார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .