2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்று உலக மனிதநேய தினம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர், இயற்கை அனர்த்தங்கள், நோய், போசாக்கின்மை போன்ற காரணங்களால்  பாதிக்கப்பட்ட இலட்சம் மக்களை நினைவு கூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனிதநேய தினம் இன்று 19ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்துடன், துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவோருக்காக பணியாற்றுவோர், இப்பணிகளில் ஈடுபடும் போது கொல்லப்பட்டோர், மற்றும் காயமடைந்தவர்களை நினைவு கூரும் தினமாகவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் இந்த உலக மனிதநேய தினம் உருவாக்கப்பட்டது.

இலங்கையை பொறுத்தவரையில் யுத்தம் மற்றம் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கபட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் போது எட்டப்பட்ட வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இன்றைய தினம் அமைவதாக ஐ.நா தகவல் மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று காலை 9.30 மணி முதல் 11 மணிவரை இந்த உலக மனித நேய தினம்,
202/204, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு - 7இல் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .