2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முன்னேஸ்வரம் ஆலயத்தில் மிருகப் பலியை தடுக்கவும் : பொலிஸ்மா அதிபரிடம் பிக்குமார் சம்மேளனம் வலியுறுத்த

Super User   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள மிருகப் பலியை பொலிஸ்மா அதிபர் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் இல்லாவிடின் அதில்  தான் தலையிட்டு தடுக்க வேண்டியேற்படும் எனவும் தேசிய பிக்குமார் சம்மேளனத்தின் செயலாளர் ரஜவத்த விஜய தேரர் கூறியுள்ளார்.

கொழும்பில் வியாழனன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இவ்வாறு தாம் தலையிட்டால் அது மதங்களுக்கிடையிலான ஐக்கியத்தில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

"ஆகஸ்ட் 25 ஆம் திகதி 300 ஆடுகள் மற்றும் கோழிகள் இக்கோயிலில் பலிகொடுக்கப்படவுள்ளன. அகிம்சாவாதி நாட்டில் இத்தகைய பலிபூஜைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தில் மிருகங்களை பலியிடுவதற்கு சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இல்லையென்பதால் இதை தடுப்பது பொலிஸாருக்கு கடினமான செயலல்ல" எனவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0

  • Mohamed Saturday, 21 August 2010 10:52 PM

    நாடு இருக்கும் நிலைக்கு இனப்பிரச்சனையும் வந்தால்?

    Reply : 0       0

    xlntgson Sunday, 22 August 2010 09:20 PM

    பலிகளை நிறுத்தியே தீருவேன் என்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்த நடவடிக்கைகளினால் ஆடு, மாடு மந்தை வைத்திருப்பவர்களின் கடுமையான எதிர்ப்புக்குள்ளானார். ஆடுகள் முக்கியமாக செம்மறியாடுகள் மிக வேகமாக பெருகி பலன் தரக்கூடியவை.கிடை அடித்து அவற்றின் கழிவுகள் சிறந்த கார்போனிக் உரமாகவும் டீபீ ஆஸ்த்மா போன்ற நோய்களுக்கு இயற்கை வைத்தியமும் ஆகும். அது ஒரு தொழிலாக இல்லாதவிடத்து யாரும் வளர்க்கவோ பாதுகாக்கவோ மாட்டார்கள், ஜீவகாருண்யம் குட்டிகளை காப்பாற்றுவதிலும் இனங்கள் அழியாமல் காப்பதிலுமே இருக்கிறது.

    Reply : 0       0

    xlntgson Sunday, 22 August 2010 09:31 PM

    நல்ல வகை ஆடுகள் இல்லாமல் போய் இப்போது பிற நாடுகளிலிருந்து தருவிக்கவேண்டிய நிலை!இதில் ஒரு விகிதாச்சாரம் இருக்கிறது அதன் படி சில வகை அருகும் இனங்களை அறுககாதிருக்க சட்டம் வேண்டுமே ஒழிய ஒரு மத கருத்தை வேறு மதத்தவருக்கு திணிக்கப் பயன்படுத்தக்கூடாது. யாரும் பாலை அதிகமாக பருகினால் ஏன், மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவது நின்று போகாது? மதுவும் அதற்கு பொறித்த இறைச்சியும் வேண்டும் என்றால் களவாகக்கூட அறுத்துவிடுவார்கள், இறைச்சி பஞ்சம் என்று வெளிநாட்டிலிருந்து தருவிக்கலாமா? கொன்றால் பாவம் தின்றால் போச்சு?

    Reply : 0       0

    sheen Tuesday, 24 August 2010 08:05 PM

    ஓமோம்.ஜெயலலிதா தோற்றுப்போனதற்கு முக்கியமான காரணம் அதுவும்.விவசாய நாடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கும் அறுக்கும் கால்நடைகளுக்கும் ஒரு விகிதாசாரம் இல்லாமல் இல்லை. இது காலம் வரை.இப்பழக்கம் தானே இல்லாமல் போய் இருக்கும் அருகும் இனங்களை கூட காளைகளை மட்டும் அறுக்க அனுமதித்தால் அவ்வினங்கள் அழியாது.கோயில்மாடுகள் போதும் இனப்பெருக்கத்தை தொடர.நல்ல இன காளைகள் கோயில்மாடுகளாக திரிந்து அநேகமான பசுக்களை கருவூட்டும்.நவீனம் கூடி பழமை கேலிக்குள்ளாக்கப்படுகிறது. பணிந்து போவது போல் சில கடித தலைப்பு சங்க அறிக்கைகள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .