2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொழில்பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த பெண் கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாவை வசூலித்து மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

52 வயதான இப்பெண், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு நெருக்கமானவராக தம்மை இனங்காட்டிக் கொண்டு இம்மோசடியை புரிந்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் சபை, கொழும்புத் துறைமுகம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புப் பெற்றுத்தருவதாக அப்பெண் உறுதியளித்தாராம்.

அவரிடமிருந்து 18 விண்ணப்பங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரை நாளை மறுதினம் திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0

  • Ramesh Saturday, 21 August 2010 11:11 PM

    தம்மை விடுவிக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அப்பெண்ணும் கூறுவாரா என்னவோ?

    Reply : 0       0

    waz Sunday, 22 August 2010 11:05 AM

    அந்தப்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கினால் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .