2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஐ.நாவுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா

Super User   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதின்)

ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப்  பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது புதிய பதவியை விரைவில் பொறுப்பேற்பார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

முன்னாள் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகரவிடமிருந்து கடமைகளைப் பொறுப்பேற்றபின், இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐ.நா. எழுப்பிய கரிசனைகள் விவகாரத்தை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சீராக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

58 ஆவது படைப்பிரிவுத் தளபதியாக விளங்கிய மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் பெயரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவினால் வழங்கப்பட்ட செவ்வியொன்றில் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளை சுட்டுக்கொல்லும் உத்தரவை அவர் பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவித்ததாக செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .