2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பணிப்பெண்ணைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையானோர் திரண்டனர்

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபிய எஜமானரால் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இலங்கை திரும்பிய பெண்ணுக்கு நேற்று வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை இடம்பெற்றது. சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இப்பெண்ணினை பார்வையிடுவதற்கு மாத்தறை- அந்தப்பனை வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

அப்பெண் தற்போது குணமடைந்து வருவதுடன் சத்திர சிகிச்சையின்பின் மீண்டும் பேசவும் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்கவும் அவரை நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Dr Najimudeen Sunday, 29 August 2010 06:05 PM

    இது மிகவும் கொடுமை. அப்பாவிப் பெண்ணுக்கு அநியாயம். இறைவன் தண்டனை நிச்சயம். நாமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply : 0       0

    xlntgson Sunday, 29 August 2010 09:57 PM

    அவரென்ன காட்சிப்பொருளா, கண்ணாடியில் அடைத்து வைக்க? இது அவருக்கு பெரும் தொல்லை ஆகிவிடும். பரிசுப்பொருள் கொடுப்பவர்கள் மட்டும் வாருங்கள், வெறும் கையோடு வராதீர்கள் என்று அவர் அறிவிக்க வேண்டும்!அதிக நேரம் பேசிக்கொண்டு இருக்காமல்- 'இடத்தை காலி பண்ணுங்கள் மற்றவருக்கு இடத்தை கொடுத்து' என்று கண்டக்டர் போல் ஒருவர் கூறிக்கொண்டு இருக்க வேண்டும். சில காலம் சென்றதும் எங்கே என்னை காண வந்த கூட்டம் ஏன் என்னை மறந்து விட்டது? என்று பித்துப்பிடித்த மாதிரி ஆனாலும் ஆகிவிடுவார். பிறகு ஒரு தொலைபேசி அழைப்பு கூட இராது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .