2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலில் மீண்டும் உவைஸ் முஹம்மத் இம்தியாஸ்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கொழும்பு மேயரான உவைஸ் முஹம்மத் இம்தியாஸ்  முன்னர் செய்த தொழிலான முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலில் மீண்டும் ஈடுபட்டுள்ளார். 

பகல் வேளைகளில் தான் சிறிய வேலைகளை செய்வதுடன், இரவு வேளையில்  முச்சக்கரவண்டி ஓட்டுவதாகவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு உவைஸ் முஹம்மத் இம்தியாஸ் தெரிவித்தார்.

தனக்கு நீண்டகாலமாக வீடோ அல்லது வருமானமோ இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில்,  உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு முன்னாள் மேயரிடம், கொழும்பு மாநகரசபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் கோரியிருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்த உவைஸ் முஹம்மத் இம்தியாஸ், தனக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்து போவதற்கு வேறு வீடு இல்லை எனவும் கூறினார்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தை  காலி செய்யுமாறு தனக்கு ஜனாதிபதி தெரிவிக்கும் வரை தான் மேற்படி இல்லத்திலிருந்து வெளியேற மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும், அதிகாரிகள் குறித்த இல்லத்திலிருந்து தன்னை காலி செய்தால், தான் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே கூடாரமொன்றை அமைத்து அதில்  தங்குவேன் எனவும் அவர் கூறினார்.

மேற்படி இல்லத்தில் தங்குமாறு தனக்கு முதலமைச்சரும் ஆளுநரும் அனுமதி வழங்கியிருப்பதாகவும்  உவைஸ் முஹம்மத் இம்தியாஸ் தெரிவித்தார்.

கொழும்பு மாநாகரசபையின் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.

 

 
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 30 August 2010 09:15 PM

    முச்சக்கரவண்டி வைத்திருப்பவர்கள் சங்கங்கள் எத்தனையோ இருக்கின்றனவே, இவரது பிரச்சினையை கையாள மாட்டார்களா? ஒரு நேரம் அவர்களுக்கெல்லாம் பேசும் பேச்சாளர் போல் இருந்தார். ஜனாதிபதியுடன் நேரில் கதைக்கக் கூடியவராக இருந்தார். இவரது கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்காதது ஆச்சரியம். தொழில் எதுவாக இருந்தாலும் அரசியல் புரிய இயலுமாக இருக்க வேண்டும். அரசியலே தொழிலாக கொண்டிருப்பவர்கள் இவருக்கு பதில் கூற வேண்டும். யார்தான் கட்சி மாறவில்லை? ஒரு செருப்புத் தொழிலாளியின் மகன் தான் அடிமைத்தனத்தில் அமெரிக்காவையே மீட்டவர்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X