2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Super User   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசியலமைப்பு திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவை சற்று முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த யோசனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் வகிப்பதற்கான கட்டுப்பாட்டை நீக்குதல், உள்ளுராட்சி சபைகளுக்கு  விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறை ஆகியன கலந்த தேர்தலை நடத்துததல், அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக 5 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தல் ஆகியனவும் இந்த யோசனைகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .