2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான முரளி தனது 47ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக சென்னை, போரூர் ராமச்சந்திரா வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.

பிரபல கன்னட தயாரிப்பாளர் சித்தளிங்கய்யாவின் மகனான முரளி, 1984ஆம் ஆண்டு பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு படத்தில் நடித்தார்.

இதயம், புதுவசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு, கடல்பூக்கள், தேசிய கீதம், வாட்டாகுடி இரணியன், மம்முட்டியுடன் ஆனந்தம், சரத்குமாருடன் சமுத்திரம்,சிவாஜியுடன் என் ஆச ராசாவே, விஜயகாந்துடன் என் ஆசை மச்சான்,  அள்ளித்தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், அதர்மம், கீதாஞ்சலி, உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்தார்.  

இவரது மகன் அதர்வா, நாயகனாக நடித்த "பாணா" திரைப்படம் தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகனாகிவிட்ட மகன் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாடியிருந்த முரளி, "30 வருட திரையுலக வாழ்க்கையில் நான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் மன்னித்து தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் மகன் அதர்வாவிடம், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் "பகல் நிலவு", "இதயம்" படங்களில் நடித்தேன். அதே நிறுவனம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்துள்ளமை சந்தோஷத்துக்குறியது. "பூவிலங்கு" படத்தில் நான் நடித்திருந்ததை விட அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறான். எனக்கு நடனமாடவே வராது. ஆனால், அதர்வா நன்றாக நடனமாடியிருக்கிறான். ஒரு நடிகன் மகன் ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம். இங்கு வந்திருந்தவர்கள், அதர்வாவை பாராட்டினார்கள். எனவே அவன் ஜெயித்து விடுவான் என நம்புகிறேன்" என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 08 September 2010 09:16 PM

    நடிகர்கள் ரொம்பவும் அழகாக இருக்க தேவை இல்லை என்பதற்கு உதாரணமானவர்.அழகில்லை என்று அக்காலத்தில் ஜெயலலிதா நடிக்க மறுத்த ரஜினியின் வருகையினால்- பெரும் வரவேற்பை பெற்றதனால்- விஜயகாந்த் முரளி போன்ற சாதாரண தோற்றம் உடையவர்களும் கதாநாயகனாக நடிக்க வைக்கப்பட்டனர்.அநேகர் ஓரிரு படங்களில் மட்டும் நடித்து 'மறைந்தனர்'. இவரோ பல படங்களில் நடித்தும் வாரிசு ஒன்றை தந்தும் மார்படைப்பால்இயற்கையாக மறைந்திருக்கிறார். மறைவில் வாடும் அவரது உறவினருக்கு இரங்கல்(நான் அவரது இரசிகன் அல்லன். நான் அதிகம் சினிமா பார்ப்பதும் இல்லை)

    Reply : 0       0

    M.Mahanama Friday, 10 September 2010 07:11 AM

    முரளி நல்ல நடிகர் அடக்கமானவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஹார்ட் அட்டாக் இப்போது இலகுவாக ரெகவர் பண்ணலாம். பட் பாமிலி பைல் ஆகிடாங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .