2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பயண எச்சரிக்கை நீக்கம்

Super User   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜமீலா நஜ்முதீன்)

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குப் பயணம் செய்வதற்கான உத்தியோகபூர்வ பயண எச்சரிக்கையை கனடா நீக்கியுள்ளது. எனினும் உயர் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தனது பிரஜைகளை கனேடிய அரசாங்கம் கோரியுள்ளது.

அநாவசியமாக இலங்கைக்குப் பயணம்   செய்வது குறித்து எச்சரிக்கையை கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் நீக்கியது. எனினும் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அப்போது கனேடிய அரசாங்கம் கோரியிருந்தது.

இந்நிலையில் தற்போது உத்தியோகபூர்வ பயண எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லிசா மொனேட் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

'இந்த பயண அறிக்கைகளின் நோக்கம் இலங்கையின் பாதுகாப்பு நிலைமை குறித்து கனேடியப் பயணிகள் தமது பயணப் பாதுகாப்புக் குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு நிலைமை குறித்து தெரிவிப்பதாகும். இலங்கை உட்பட 200 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கான பயண அறிக்கைகளை நாம் கொண்டுள்ளோம் எனவும் லிசா மொனேட் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .