2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேலும் பல ஐ.தே.க. எம்.பிகள் இணைவர்: தயாசிறி ஜயசேகர

Super User   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதீன்)

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், சுயாதீனக் குழுவாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் பலர் இணைவர் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

"தலைவர் தொடர்ந்தும் பிடிவாதமாக இருப்பாரேயானால் மேலும் பல எம்.பிகள் எம்முடன் இணைவர்.  ஒரு கட்சி என்ற வகையில் இதே நிலைமை மேலும் தொடர முடியாது" என டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுயாதீனக் குழுவாக செயற்படப் போவது குறித்து மேற்படி 25 எம்.பிகளில் எவரும் தனக்கோ சபாநாயகருக்கோ எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுக்கோ அறிவிக்கவில்லை ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை குறித்து கேட்டபோது, இதற்காகத்தான் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகரவிடம் பதிலளித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X