2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மற்றொரு பிரதிநிதியை நியமிக்க ரணில் தீர்மானம்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற சபைக்கான தனது பிரதிநிதியாக த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை நியமித்ததை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் மற்றொரு பிரதிநிதியொருவரை நியமிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் தொடர்;சியாக நாடாளுமன்றச் சபையை புறக்கணித்தால் ஜனாதிபதி தன்னையும் தனது பிரதிநிதியையும் நீக்கிவிடுவார் எனவும் அதனால் சிறுபான்மைக் கட்சியைச் சார்ந்த மற்றொருவரை இச்சபைக்கு நியமிக்கவுள்ளதாகவும் ரணில் கூறினார்.

இச்சபைக்கு பிரதிநிதிகளை நியமிப்பதை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்போவதாகவும் வேறு யாரையும் நியமிப்பதற்கு சபாநாயகரை அனுமதிக்கப் போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 17 September 2010 09:13 PM

    அதுவும் நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே விருப்பமில்லாத ஒருவருக்கு பிரேரித்தேன் என்று சொல்வார் பிறகு. இவரது நம்பக தன்மை அந்தரத்தில்! ஒரு வாய்ப்பு:ஊடகங்கள் இருதரப்பையும் விசாரிக்காமல் பரபரப்பு செய்திகளை வெளியிடுவது,இனிமேல் ரணிலுடைய அறிவிப்புகளை சரிபார்க்காமல் வெளியிடாதீர்கள்.செய்தி ஆர்வலர்களுக்கு செய்தி பார்க்கும் ஆசையே இல்லாமல் போய்விடும்! மிகவும் சின்னத்தனமான அறிக்கைகள். சிறுபிள்ளைத்தனமான என்றுதான் சொல்ல நினைத்தேன். சிறுபிள்ளைகளுக்கு அவமானம் என்பதால் வேறு சொல் தேடிப்பார்த்தேன் அதுவும் அப்படியே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .