2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம் மூலம் ஆஸி. அரசு மீது ஆதிக்கம் செலுத்த முடியாது:குடிவரவு அமைச்சர்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டியான் சில்வா)

அவுஸ்திரேலியா வில்லாவூட் தடுப்பு நிலைய கூரையின்  மீதேறி 9 இலங்கைத் தமிழ் அகதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிரவுன், இவ்வாறனா ஆர்ப்பாட்டம் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது எனக் கூறினார்.

ஒவ்வொரு குடிவரவுத் திணைக்களமும் புகலிடக் கோரிக்கையாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை ஆராயுமே என்பதுடன், ஆனால் இவ்வாறான ஆர்ப்பாட்டம் மூலம் அதிகாரம் செலுத்த முடியாது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கூறியதாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவித்தன.

சிலவேளையில் இந்த வாரம் தனிநபர்களின் குடிவரவு அந்தஸ்து மதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியா வில்லாவூட் தடுப்பு நிலையக்  கூரையின் மீதேறி 9 இலங்கைத் தமிழர்கள் உட்பட 11 பேர்  நீராகாரமின்றி 24 மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 21ஆம் திகதி முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)

 







 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .