2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலமானார்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளர் சந்திரபோஸ் தனது 55 வயதில் சென்னையில் இன்று வியாழக்கிழமை காலை காலமானார்.

கல்லீரல் நோய் காரணமாக அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்,  இன்று வியாழக்கிழமை காலை காலமானார். ஏற்கனவே இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டார் என செய்திகள் பரவியிருந்தன. இந்நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரபோஸ் இன்று அதிகாலை காலமாகினார்.

தமிழ் சினிமாவில் 350 இற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்த சந்திரபோஸ், 1977ஆம் ஆண்டில் ஆரம்பித்த அவரது இசைப் பயணம் 20 வருடங்களுக்கும் மேலாக நீடித்தது.

ரஜனி நடித்த மனிதன், ராஜா சின்னரோஜா உள்ளிட்ட ஏவி.எம்.மின் தயாரிப்பில் வந்த 12 படங்களுக்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார். அத்துடன் ஊர்க்காவலன், விடுதலை, அண்ணாநகர் முதல் தெரு, மாநகர காவல், சங்கர் குரு, வசந்தி, பாட்டி சொல்லைத்தட்டாதே, புதிய பாதை, தொட்டில் சபதம், மக்கள் என் பக்கம்  உட்பட பல வெற்றிப்படங்களுக்கும் சந்திரபோஸ் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தார்.

இது இவ்வாறிருக்க, வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை, வானத்தை பார்த்தேன் பூமிய
பார்த்தேன், ரவிவர்மன் எழுதாத கலையோ, சின்னச்சின்னப்பூவே நீ கண்ணால் பாரு போதும்’ என்பன போன்ற ஏராளமான பாடல்களையும் இவர்  தந்துள்ளார்.
 
12 வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடித்த இவர்,   கலைஞர் நடித்த மணிமகுடம் நாடகத்தில் கூட நடித்திருக்கிறார். கலைஞரின் பராசக்தி நாடகமாக நடந்தபோது அதிலும் நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியான சின்னத்திரை நாடகங்களான  மெட்டிஒலி, சித்திக் தயாரித்த மலர்கள் ஆகியவற்றிலும் இவர் நடித்துள்ளார்.

மனிதன் படத்தில் ‘வாழும்போது செத்து செத்து பிழைப்பவன் மனிதனா வாழ்ந்த பின்னும் பேரை நாட்டின் நிலைப்பவன் மனிதனா’ என்ற வரிகள் மிக ஆழமான கருத்துடையது.

இந்தப் பாடல் வரிகளுக்கு இசையைமைத்த சந்திரபோஸ்,  ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலி மூலம் அந்த வரிகளை அவர் அர்த்தப்படுத்தியிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Tuesday, 28 September 2010 09:39 PM

    நல்ல இசை அமைப்பாளர். இவரது பல பாடல்களை இசைக்காகவே நான் இரசித்திருக்கின்றேன். ஆனால் 55 வயதில் கல்லீரல் நோயில் இறந்தார் என்பதுதான் கவலை. மதுப்பழக்கமோ தெரியாது? என்னுடைய யூகம் சரியானதாக இருக்கலாம். பொதுவாக கலை உலகை சேர்ந்தவர்களது எமன் மது. ரகுவரன் என்ற பிரபல்யமான இரண்டாம் நிலை நடிகர் இறந்ததும் மதுவுக்கு அடிமையாகி என்று கண்டேன். சினிமா உலகை காப்பாற்ற வேண்டும் என்றால் மதுப்பழக்கத்தை கைவிட தூண்டுதலாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் நல்ல ஓர் உதாரணம்.ஸ்டைலாக புகைபிடிக்கும் காட்சியில் வில்லனாக அறிமுகமானவர்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .