2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்தோருக்கு நஷ்ட ஈடு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களும் தமது சொத்துக்களை இழந்தவர்களுமான சுமார் 250 இடம்பெயர்ந்தவர்களுக்கு நட்ட ஈடாக 25 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.

இந்த நட்ட ஈட்டை பெறுவதற்கு விண்ணப்பதாரி யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் வசித்திருக்க வேண்டும். கிராம சேவையாளரிடம் தம்மை பதிவு செய்திருக்க வேண்டும். இவரது விண்ணப்பத்தை மாவட்ட செயலகம் அங்கீகரிக்கப்பட வேண்டும். முன்னர் எந்த நட்ட ஈட்டையும் பெறாதவராக இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பம், மாவட்ட செயலகத்திலிருந்து கிடைத்தவுடன் நாம் நட்ட ஈட்டை வழங்குவோம் என புனர்வாழ்வு அதிகாரசபை தலைவர் ஈ.ஏ.சமரசிங்க தெரிவித்தார். யுத்தத்தால் கடுமைகாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு 2.5 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும். இந்த நட்ட ஈடு அரசாங்கத்திலிருந்து வழங்கப்படுகிறது. வெளியார் எவரும் இதில் தொடர்புபடவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படவுள்ளன. பயங்கரவாத செயலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும். யுத்தத்தால் சொத்துக்களை இழந்த நிலையில் பாதிக்கப்பட்ட அரச ஊழியருக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவும் ஏனையோருக்கு ஒரு இலட்சம் ரூபாவும் நட்ட ஈடாக வழங்கப்படவுள்ளது.

250 பேருக்கு முதலில் நட்ட ஈடு வழங்கப்படும். இதற்காக 25,000 நட்ட ஈட்டுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில நிராகரிக்கப்பட்டுள்ளன. நட்ட ஈடு வழங்கும் விழா நிகழ்வுகள் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் இடம்பெறும் என சமரசிங்க தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .