2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேசிய புலனாய்வு சேவையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் புதிதாக தேசிய புலனாய்வு சேவையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதன் மூலம் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாடுகளைப் போன்று இலங்கையிலும் தேசிய புலனாய்வு சேவையொன்றை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம் அதன் அனைத்து கட்டுப்பாடுகளையும் தீர்மானங்களையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டு நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பினை நிலைபெறச் செய்தல், அதற்கான புதிய முறைகளைக் கையாளுதல், பயங்கரவாதத்தினை ஒழித்து பெறப்பட்ட சமாதானத்தை தொடர்ந்தும் நிலைநிறுத்துதல் என்ற காரணிகளை முதன்மையாகக் கொண்டே இந்த புலனாய்வு சேவை நிறுவப்படவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்படவுள்ள இந்த தேசிய புலனாய்வு சேவையானது, மிகவும் கடுமையாகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதனால், அதற்கான சட்டமூலத்தினை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரச தகவல் பிரிவுகள் தெரிவிக்கின்றன.

குறித்த சட்டமூலத்தினைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார் என்று மேற்படி தகவல்கள் மேலும் கூறுகின்றன.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Monday, 11 October 2010 05:25 PM

    வெள்ளம் வருமுன் அணை கட்டவேண்டும் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .