2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சரத் பொன்சேகா விடயத்தில் ஐ.தே.க. தலைமைத்துவம் உண்மையுடன் செயற்படவில்லை : ஜே.வி.பி.

Super User   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, க.கோகிலவாணி)

சரத் பொன்சேகாவின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உண்மையுடன் செயற்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)  குற்றம் சுமத்தியுள்ளது.

ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போது ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பாக கூறுகையில், 'ஐ.தே.க. தலைமைத்துவம் இவ்விடயத்தில் உண்மையுடன் செயற்படவில்லை. ஆனால் அக்கட்சியின் கீழ் மட்ட அங்கத்தவர்கள் இவ்விடயத்தில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் எம்மோடு உள்ளனர்' என்றார்.

அதேவேளை, சரத் பொன்சேகாவுக்குப் பதிலாக ஜே.வி.பி. அங்கத்தவர்கள் எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க மாட்டார்கள் எனவும் ரில்வின் சில்வா கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலில் சரத் பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் இணைந்து ஜே.வி.பி. போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சரத் பொன்சேகாவுடன் இணைந்துபோட்டியிட்டவர்களுக்கு பொன்சேகாவுக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு தார்மீக உரிமையில்லை. பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ  நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் எவரும்  அவருக்குப் பதிலாக எம்.பியாக பதவியேற்க முடியாது என ரில்வின் சில்வா கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'பொன்சோவின் சிறைத்தண்டனைக்கு எதிராக நாம் வழக்குத் தொடுத்துள்ளோம். அதேவேளை, அவருக்கு எதிரான சிறைத்தண்டனை அடிப்படையில் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்தது. அதனாலேயே நாம் இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்து லக்ஷ்மன் நிபுணாராச்சியின் பெயரை வர்த்தமானியில் வெளியிடக் கோரினோம். நிபுணாராச்சி பதவியேற்றால் அது அரசாங்கத்தன் முயற்சியை அங்கீகரிப்பதாக அமைந்துவிடும். ஆதனால் எமது கட்சி அங்கத்தவர் பொன்சேகாவுக்குப் பதிலாக எம்.பியாக பதவியேற்க மாட்டார்' என்றார்.

"சரத் பொன்கோவின் விடுதலைக்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம். நிச்சயம் அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவோம்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பின் எமது கட்சிக்கு கிடைத்த இரு ஆசனங்களை அரசாங்கத் தரப்பிற்கு வழங்கினோம். மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் பதவிக்கும் சலுகைகளுக்கும் அலைந்த வரலாறு இல்லை. எமக்கு ஜனநாயகம், நீதி நிலைநாட்டப்படுவதுதான் முக்கியம்" எனவும்  ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • Thilak Tuesday, 19 October 2010 10:40 PM

    பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டமை ஐ.தே.க. ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளை ஒன்றிணையச்செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் இவர்கள் மோதிக்கொள்கிறார்களே.

    Reply : 0       0

    xlntgson Friday, 22 October 2010 09:29 PM

    பொன்சேகா சுயமாக செயல்படவில்லை அவரை பயன்படுத்திக்கொண்டவர்கள் தாம் தொடர்ந்தும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று ஐதேக கருதலாம். அதேநேரம் அவரை தொங்கிப்பிடித்து கொண்டால் தான் தங்களுக்கு அரசியல் எதிர்காலம் என்று ஜேவிபி கருதலாம். பொதுவாக அரசியலை இராணுவமயமாக்கக்கூடாது என்பதில் ஜேவிபி தவிர மற்றெல்லா கட்சிகளிலும் ஓர் உடன்பாடு இருப்பதாகவே தெரிகிறது. வாசுதேவனானயக்காரவின் பேச்சு இதை உறுதிப்படுத்துகிறது. அவர் சரத் பொன்சேகாவின் மீதான காதலுக்கு காரணம் அது என்று .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X