2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மனித உரிமை குழுக்களின் நடத்தை காலனித்துவ தன்மையானவை : அமைச்சர் பீரிஸ்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக சர்வதேச மனித உரிமை குழுக்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இக்குழுக்களின் நடத்தை காலனித்துவவாதத் தனமானவை எனவும் விமர்சித்துள்ளார்.

மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக் குழு ஆகியன நிராகரித்திருந்தன. மேற்படி ஆணைக்குழு போதியளவு சுயாதீனமானது அல்ல எனவும் போதியளவு அதிகாரங்களைக் கொண்டதல்ல எனவும்  எனவும் மேற்படி மனித உரிமை குழுக்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், பிரிட்டனுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், லண்டனில் தந்திரோபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவகத்தில் இன்று உரையாற்றும்போது மேற்படி மனித உரிமை குழுக்களை விமர்சித்துள்ளார்.

இக்குழுக்களின் செயற்பாடு "ஏறத்தாழ காலனித்துவவாத, தம்மை மேலானவர்களாக எண்ணிக்கொள்ளும் தன்மையான, இலங்கையர்கள் தமது எதிர்காலத்திற்கான பாதையை வகுத்துக்கொள்ள முடியாதென்பதால் மற்றவர்கள் அதில் தலையிட வேண்டுமென எண்ணும் மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது "என அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் பீரிஸ், மனித உரிமைக் குழுக்களும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் எதிர்மறையான ஊகங்களுடன் செயற்படத் தொடங்கக்கூடாது எனக் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .